நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை (08) தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு பவுண் தங்கத்தின் விலையானது 3,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 359,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 329,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 44,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 41,188 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments