கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியிலுள்ள CBI தலைமையகத்தில் நேரில் முன்னிலையானார்.
சுமார் 80 இற்கும் மேற்பட்ட கேள்விகளுடன் அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணையை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூரில் நிகழ்ந்த நடந்த சோகமான உயிரிழப்புகள் குறித்து CBI அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கின் ஒரு பகுதியாக, தமிழர் வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் CBI அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு முன்னிலையானார்.
CBI அதிகாரிகள் 04 பேர் கொண்ட குழு, விஜயிடம் மட்டும் தனியாக விசாரணையை முன்னெடுத்ததாகத் தெரிய வருகிறது. இவ்விசாரணையின் போது, வழக்குத் தொடர்பாக சுமார் 80 இற்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளது.
விசாரணை நிறைவடைந்த பின்பு, அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலதிக விசாரணைக்காக விஜய் டெல்லியில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், பொங்கல் திருநாளுக்குப் பின்னர் விசாரணைக்கு முன்னிலையாவதாக விஜய் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை CBI ஏற்றுக்கொண்டது.
இதன்படி இன்று (13) நடைபெறவிருந்த விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் முன்னிலையாக வேண்டிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று CBI வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Comments