10 வது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பிப்ரவரி 07 ஆம் திகதியிலிருந்து மார்ச் 08 ஆம் திகதி வரை நடை பெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 04 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இம்முறை ICC T20 உலகக் கிண்ணத்தை யாரும் பார்க்கப் போவதில்லை என்று தமிழக வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மேலும் தெரிவிக்கையில், இந்த முறை ICC T20 உலக கிண்ணத்தை யாரும் பார்க்கப் போவதில்லை. இந்தியா மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தியா மற்றும் நமீபியா போன்ற போட்டிகள் உங்களை T20 உலக கிண்ணத்திலிருந்து உண்மையில் விலக்கி வைக்கின்றன.
1996, 1999 மற்றும் 2003 இல், நான் பாடசாலையில் இருந்தபோது உலகக் கிண்ணத்தை சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தோம்.
உலகக் கிண்ண அட்டைகளைச் சேகரித்து அட்டவணையையும் அச்சிட்டோம். ஏனெனில், போட்டி 04 வருடங்களுக்கு ஒரு முறை வந்தது. குறித்த எதிர்பார்ப்பு இயல்பாகவே உருவாகும்.
இந்தியா முதலாவது சுற்றில் இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகளை எதிர்கொள்ளும். அது அதனை இன்னும் உற்சாகப்படுத்தியது. இன்றைய காலகட்டத்தில், குறித்த எதிர்பார்ப்பு உணர்வு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments