Ticker

6/recent/ticker-posts

உலகில் மிகவும் வயதானவர் என்று கின்னஸ் சாதனை படைத்த பெண் மரணம்

 உலகின் மிகவும் வயதான நபராக விளங்கிய ஜப்பானைச் சேர்ந்த பெண் டொமிகோ இடூகா என்பவர் தனது 116 வது வயதில் காலமானதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கின்னஸ் உலக சாதனையின் பிரகாரம், உலகின் மிக வயதான நபராக இருந்த ஜப்பானிய பெண் டோமிகோ இடூகா காலமானதாக ஆஷியா நகர அதிகாரியொருவர் கடந்த சனிக்கிழமை அன்று தெரிவித்தார். ஆனால், முதியோர் கொள்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரியான யோஷிட்சுகு நாகாதா, மத்திய ஜப்பானின் ஹியோகோ ப்ரிஃபெக்சரில் உள்ள ஆஷியாவிலுள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வைத்தே இறந்ததாகக் கூறியுள்ளார்.

வாழைப்பழங்கள் மற்றும் கல்பிஸ் எனப்படும் தயிர் சுவை கொண்ட ஜப்பானிய பானத்தை விரும்பி உண்ணுகின்ற இடூகா, 1908 மே 23 ஆம் திகதி பிறந்தவர் ஆவார்.  ஒசாகாவில் பிறந்த இவர், உயர்நிலைப் பாடசாலையில் கரப்பந்து விளையாட்டு வீரராகவும் இருந்தார். 20 வயதில் திருமணம் செய்து கொண்ட இவருக்கு 02 ஆண் பிள்ளைகளும் 02 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் போது தனது கணவரின் புடைவைத் தொழிற்சாலை அலுவலகத்தை நிர்வகித்த இடுகா, 1979ல் கணவர் இறந்த பிறகு நாராவில் தனியாக வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments