Ticker

6/recent/ticker-posts

ஹாட் டோக் (Hot dog) சாப்பிடுவதற்கு அதிரடியாக தடை விதித்த ஜனாதிபதி.

வட கொரிய நாட்டவர்கள் Hot dog இனை உணவாக உட்கொள்வதற்காக கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார். இந்த உணவை வீடுகளிலோ தெருக்களிலோ பரிமாறுவது அல்லது விற்பது தேசத்துரோகச் செயல் என்றும் அவர் ஆணையிட்டுள்ளார்.

வட கொரியாவில் நிலைமைகள் மிகவும் பயங்கரமாக உள்ளன, அவை மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களாக இருக்கலாம் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது.


மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான படையெடுப்பு

மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான படையெடுப்பு என்று வடகொரிய தலைவர் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2017 இல் மேற்கு சார்பு தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வட கொரியர்களிடையே வெகுவிரைவாக பிரபலமடைந்தது. Budae Jjigae – ஒரு வகை ஹாட் டாக் மற்றும் ஹாட் நூடுல்ஸ் சூப் என்று நகரம் முழுவதுமாக பேசப்பட்டது.

இப்போது சந்தையில் Budae Jjigae உணவு விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை விற்பனை செய்யும் கடைகள் மூடப்படும் என்று காவல்துறை மற்றும் சந்தை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து வடகொரியா மீது கிம் பல விசித்திரமான சட்டங்களை விதித்து வருகின்றார். அதேவேளையில், சமீபத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடியதற்காக மரண தண்டனை அச்சுறுத்தல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 


Post a Comment

0 Comments