அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், ஆபாசபட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் போட்டியின்போது தேர்தல் நிதியில் இருந்து ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. டிரம்புடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவரும் தெரிவித்தார்.
இதனால் தனது தேர்தல் பிரசாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதுபற்றி பேசாமல் இருப்பதற்காக குறித்த நடிகைக்கு டிரம்ப் பணம் கொடுத்தாக குற்றம் சாட்டப்பட்டது. வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், இதற்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இத்தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், குறித்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை விசாரித்த நீதிபதி மெர்ச்சன் என்பவர் கூறும் போது, டிரம்ப் குற்றவாளி என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவரது தண்டனை விவரம் குறித்து ஜனவரி 10 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்க 10 நாட்களுக்கு முன்பு தண்டனை விவரமானது அறிவிக்கப்படவுள்ளது.
அதேவேளையில் டிரம்ப் புதிய அதிபராக தேர்வாகியிருப்பதால், சிறை தண்டனை இல்லாமல், அபராதம் மட்டும் விதிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிரம்ப் அதிபராக பதவியேற்பதில் எந்தவித சிக்கலும் ஏற்படாது என்று தெரிய வந்ததள்ளளது. தேவேளை அமெரிக்க அதிபர் வரலாற்றில், குற்ற வழக்குடன் ஒருவர் அதிபராக பதவியேற்பதும் இதுவே முதன் முறையாகும்.
0 Comments