திருகோணமலை புல்மோட்டையில் அமைந்துள்ள பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பின் போது, ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த மாணவன் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கைகலப்பானது இரு மாணவர்களும் பாடசாலை முடிந்து வெளியே வரும் வேளையிலேயே ஏற்பட்டுள்ளது. காதல் பிரச்சினை காரணமாக இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments