Ticker

6/recent/ticker-posts

இடை நிறுத்தப்படுகிறதா தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை?

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்பட மாட்டாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார். 

இன்று (20) நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

இதன்படி 2029 ஆம் ஆண்டு வரை புலமைப்பரிசில் பரீட்சையை எந்தவித மாற்றமும் இல்லாமல் நடத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், 2029 ஆம் ஆண்டுக்கு பின்னர் புலமைப்பரிசில் பரீட்சையை நடாத்துவது குறித்து பரிசீலிக்க ஒரு குழு நியமிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments