Ticker

6/recent/ticker-posts

100 பூனைகளை வரதட்சணையாக வழங்கிய பெற்றோர்.

 திருமணத்தின் போது பணம், தங்கம், நிலம் என்று வரதட்சணை வழங்குவது வழக்கம். ஆனால், வியட்நாமைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணொருவருக்கு, அவரது பெற்றோர் இவற்றோடு சேர்த்து 100 அரிய வகை சிவேட் பூனைக்குட்டிகளையும் வரதட்சணையாக வழங்கியமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பூனைக்குட்டிகளின் மதிப்பு மட்டும் ரூ.50 இலட்சத்திற்கும் மேல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பூனைக்குட்டிகள், உலகில் மிகவும் விலையுயர்ந்த கோபி லுவாக் காபி கொட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும்.

ஆசிய பனை பூனைகளுக்கு காபி விதைகள் உணவாக அளிக்கப்படுவதுடன், அவை முழுமையாக ஜீரணிக்கப்படாமல் கழிவு வழியாக வெளியேற்றப்படும் கொட்டைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

இந்த காபி கொட்டை தொழிலை தங்களுடைய மகள் தொடங்க உதவுவதற்காகவே இப்பூனைகளை வரதட்சணையாக வழங்கியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பூனைக்குட்டிகளுடன், மணமகளுக்கு 25 தங்கக் கட்டிகள், ரூ.17 இலட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிறுவனப் பங்குகள், 07 நிலங்கள் மற்றும் பிற விலையுயர்ந்த சொத்துக்களும் வழங்கப்பட்டுள்ளன.

மணமகளின் மாமியார்களும் ரூபாய் 6.5 லட்சம் ரொக்கம், பத்து தங்கக் கட்டிகள் மற்றும் வைர நகைகளை குறித்த தம்பதிகளுக்கு அளித்துள்ளனர்.

Post a Comment

0 Comments