2025 ஆம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இலங்கை 97 வது இடத்தை பெற்றுள்ளது.
கடந்த வருடம் 101 வது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 2.075 புள்ளிகளை பெற்று 97 வது இடத்தினை பெற்றுள்ளது.
பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிடும். இவ்வருடத்துக்கான அமைதி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் 99.7% உள்ளடக்கிய 163 நாடுகளை ஆய்வு செய்து இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் இப்பட்டியலில் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் உள்ளன.
முதல் 05 இடங்களை ஐஸ்லாந்து (1.095), அயர்லாந்து (1.260), நியூசிலாந்து (1.282), ஆஸ்திரியா (1.294) சுவிட்சர்லாந்து (1.294) போன்ற நாடுகள் முறையே பெற்றுள்ளன..
இதில் இந்தியா 115 வது இடத்தில் உள்ளதுடன், ஆசிய நாடுகளில் அதிகபட்சமாக பூட்டான் 21 வது இடத்திலும், நேபாளம் 76 வது இடத்திலும், சீனா 98ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments