Ticker

6/recent/ticker-posts

புதிய கட்சியின் பெயரை அறிவித்த எலான் மஸ்க்.

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான மோதலுக்கிடையே, ‘’தி அமெரிக்கன் பார்ட்டி’’ (The american Party) என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.


 

அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவினால், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் டெஸ்லா நிறுவனரும் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.


 

இதன் தொடர்ச்சியாக, இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி, பொதுவெளியில் (சமூக ஊடகங்களில்) சண்டையிட்டனர்.

 


இதனிடையே, 80 சதவிகித நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு புதிய கட்சி தேவையா? என்று எக்ஸ் தளத்தில் (X) எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார்.


 

இக்கருத்துக் கணிப்புக்கு 80 சதவிகிதத்தினர் (56.30 இலட்சம் பேர்) "ஆம்" என்று பதிலளித்துள்ளனர். அமெரிக்க மக்களின் இப்பதில், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது. இந்நிலையில், புதிய கட்சிக்கு "தி அமெரிக்கன் பார்ட்டி" என எலான் மஸ்க் பெயரிட்டு அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments