இந்தியாவில் ரூபாய் 20 இலட்சம் மதிப்புள்ள நகை பையை குரங்குகள் தூக்கிச் சென்றதால், பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் அந்த நகை மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர் நேற்று (07) தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுராவிலுள்ள தாகூர் பாங்கி பீகாரி கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது, அபிஷேக் அகர்வாலின் மனைவி தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கைப்பையினுல் வைத்துள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூபாய் 20 இலட்சம் ஆகும்.
இதனையடுத்து, அவர்கள் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் கூடியிருந்த குரங்குகள் குறித்த நகைப்பையை பறித்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் நகைப் பையை தேடினர்.
பின்னர், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸாரும் குறித்த இடத்துக்கு வந்தனர். பல மணிநேர தேடுதலுக்குப் பின்னர் முட்புதரில் இருந்து குறித்த நகை பையை மீட்டனர். இதனையடுத்து, மீட்தப்பட்ட நகை பையை அபிஷேக்கின் மனைவியுடம் பொலிஸார் ஒப்படைத்தனர்.
0 Comments