Ticker

6/recent/ticker-posts

ஈரானின் தலைவர் அயத்துல்லா கமேனியின் உயிர் என்னாலேயே தப்பியது. ட்ரம்ப் தெரிவிப்பு.

"ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனியை நான் படுகொலையிலிருந்து காப்பாற்றினேன். ஆனால், அவர் நன்றியில்லாமல் செயல்படுகிறார்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலுடனான மோதலின் போது ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது தனக்குத் தெரியுமென்றும், மரணத்திலிருந்து அவரது உயிரைக் காப்பாற்றியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த ஜூன் 13 ஆஅம் திகதி இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடுத்திருந்திது.

ஈரான் விஞ்ஞானிகள், இராணுவ தளபதிகள் சிலர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கத்தாரிலுள்ள அமெரிக்க விமான படைத்தளத்தை ஈரான் தாக்கியது.

இதனை தொடர்ந்து பின்வாங்கிய டிரம்ப், ஈரான்- இஸ்ரேலிடையே 12 நாள் போர் முடிவடைந்ததாக அறிவித்தார்.

இதனை இரண்டு நாடுகளும் தாமதமாக ஏற்றன. மோதல் குறித்து பேசிய காமேனி, ஈரான் இப்போரில் வெற்றி பெற்றதாக பொதுமக்களுக்கு உரையாற்றினார்.

ஈரான், மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு முயற்சித்தால், அதனை தடுப்பதற்காக அங்குள்ள முக்கிய இடங்களை குறிவைத்து குண்டுகள் வீசுவதற்கு தயங் கமாட்டேன். அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் எங்கே தங்கியுள்ளார் என்பதும் எனக்கு தெளிவாகத் தெரியும்.

ஆனால், உலகின் சக்தி வாய்ந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் அவரை கொல்வதற்கு அனுமதிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments