இந்திய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளர் சண்டையிட்ட காணொளி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.
முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் 373 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அடுத்த போட்டி ஜூலை 02 ஆம் திகதி தொடங்குகிறது.
இந்நிலையில், 02 வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி எடுத்துவரும்போது இந்திய வீரர்களுடன் பந்துவீச்சுப் பயிற்சியாளர் சண்டையிட்ட காணொளி காட்சிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதில் இவர்கள் உண்மையில் சண்டையிடவில்லை என்பதுடன், டபிள்யூ டபிள்யூ விளையாட்டைப் போல போலியாக நடித்து வந்தனர்.
இச்சம்பவத்தை காணொளியாக எடுத்த ரே ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “வலைப்பயிற்சியில் என்டர்டெயின்மென்ட் இருக்காது என யார் கூறியது?” என்று பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இக்காணொளி வைரலாகி வருகிறது.
0 Comments