Ticker

6/recent/ticker-posts

அச்சிடப்பட்ட புத்தகங்களின் விலை 20 வீதத்தால் அதிகரிப்பு.

 மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் தேசக் கட்டுமான வரி விதிப்பு காரணமாக அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்று தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்தா இந்தீவர, தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்த விழாவில் பங்கேற்றபோது இவ்வாறு கூறினார்.

 


"ஒரு புத்தகத்தின் விலை 20%, அதாவது ஐந்தில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது.. முன்பு, எழுதுபொருள் போன்ற அனைத்துப் பொருட்களுக்கும் VAT 15% ஆக இருந்தது. ஆனால், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு VAT இல்லை. சுமார் 01 மாதத்திற்கு முன்பு, VAT தொடர்பாக சில பகுப்பாய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், பின்னர் பதிலை வழங்குவதாகவும் ஜனாதிபதி செயலகத்திலிருந்து எமக்கு ஒரு கடிதம் வந்தது."

 


தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் புரவலர் காமினி மொரகொடவும் இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்கு தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

 


"உலகின் எந்த நாட்டிலும் இல்லாத VAT வரி எங்கள் புத்தகங்களுக்கு விதிக்கப்படுகின்றது. ஜனவரி 2024 முதல் 75 வருடங்களாக இலங்கையில் இல்லாத VAT வரி விதிக்கப்பட்டதால் புத்தக வணிகம் அழிவடைந்துள்ளது. இது தொடர்ந்தால் எதிர்காலத்தில், ஒரு குழந்தை கூட புத்தகம் வாங்க முடியாது." என்றும் அவர் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments