இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரான லார்கின்ஸ் இன்று (30) காலமானார். இங்கிலாந்து மற்றும் நார்தாம்ப்டன்ஷையரின் பேட்ஸ்மேனான வெய்ன் லார்கின்ஸ் வைத்து காலமானார்.
இறக்கும் போது இவருக்கு வயது 71 ஆகும். 'நெட்’ எனும் புனைப்பெயரால் அழைக்கப்படும் லார்கின்ஸ், இங்கிலாந்துக்காக 13 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
லார்கின்ஸ் 1979 - 1991 வரை நார்தாம்ப்டன்ஷையருக்காக 700 இற்கும் மேற்பட்ட முதற் தர போட்டிகளில் விளையாடினார். 1979 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக இவர் விளையாடினார்.
1982 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் அதிகாரப்பூர்வமற்ற சுற்றுப்பயணத்திற்கு 03 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார். அவர் தனது வாழ்க்கையில் 40,000 ரன்களுக்கும் மேல் பெற்றார் என்பதுடன், 85 சதங்களை அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments