Ticker

6/recent/ticker-posts

அரச பாடசாலைகளில் கற்பித்தல் நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை.

அரச பாடசாலைகளில் பாட நேரத்தை அதிகரிப்பது தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சில பாடங்களை கற்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் போதுமானதாக இல்லையென்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது குறித்து பல சந்தர்ப்பங்களில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஆசிரியர் பயிற்சி கல்வித் திட்டங்களின் போது, இது குறித்து இறுதி முடிவு எட்டப்படலாம் என்றும் பிரதியமைச்சர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.


Post a Comment

0 Comments