இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விமானியிடமிருந்து "மே டே கால்" எனப்படும் அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், அழைப்பில் யாரும் பேசவில்லையென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப் போக்குவரத்துத் துறைகளால் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரகால அழைப்பாக இந்த "மே டே கால்" என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த "மே டே கால்" என்பது பிரெஞ்சு மொழியில் "மெய்டர்" என்றால் "உதவி செய்யுங்கள்" என்று அர்த்தமாகும்.
இரண்டு விமானிகள், 10 ஊழியர்கள் உட்பட 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வானத்தில் பறக்கத் தொடங்கும் முன்னரே, 825 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குளான ஏர்-இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 169 பேர் இந்தியர்கள் என்றும், 53 பேர் பிரிட்டீஷ் நாட்டவர்கள் என்றும், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், 07 பேர் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
0 Comments