Ticker

6/recent/ticker-posts

விமானத்துடன் சேர்ந்து நொறுங்கிப் போன ஒரு குடும்பத்தின் கனவு.

பிரதிக் ஜோஷி என்ற மென்பொருள் நிபுணருடைய குடும்பத்தினர், வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்காக லண்டனுக்கு புறப்பட்ட போது விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பிரதிக் ஜோஷி 06 வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார். தனது மனைவி மற்றும் 03 இளம் குழந்தைகளுக்கு லண்டனில் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று நீண்டகாலமாக அவருக்கு ஒரு விருப்பம் இருந்துள்ளது.

பல வருடங்களாக உரிய அனுமதிகளுக்காக காத்திருந்த பின்னர், அவருடைய குடும்பத்தினர் லண்டனில் வசிப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.

02 நாட்களுக்கு முன்பு, பிரதிக் ஜோஷியின் மனைவி கோமி வியாஸ், லண்டனுக்கு புறப்படுவதற்காக தனது மருத்துவப் பதவியிலிருந்து விலகினார்.

இதனையடுத்து, நேற்றைய தினம் (12) ஏர் இந்தியா விமானத்தில் அவர்கள் ஏறி ஒரு புகைப்படமெடுத்து அதனை மகிழ்ச்சியாக உறவினர்களிடம் பகிர்ந்துள்ளனர். எனினும், துரதிஷ்டவசமாக விமானம் விபத்துக்குள்ளானதில் அவர்கள் அனைவரும் குறித்த இடத்கிலேயே உயிரிழந்துள்ளனர்.


லண்டனில் புதிய வாழ்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவர்களது கனவு விமானத்துடன் சேர்ந்தே நொறுங்கிப்போனது

https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd

Post a Comment

0 Comments