Ticker

6/recent/ticker-posts

வரதட்சணையாக மருமகளின் கிட்னியை கேட்ட மாமியார்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தீப்தி என்ற பெண், முசாபர்பூரிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு திருமணமான தீப்தி எனும் குறித்த பெண்ணை, அவளுடைய கணவரின் குடும்பத்தினர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் அனைத்தும் சுமுகமாக காணப்பட்ட நிலையில், தன்னுடைய கணவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பது குறித்து கடந்த 02 ஆண்டுகளுக்கு முன்பு இப்பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக, மருமகளின் கிட்னியை வரதட்சணையாக மாமியாரின் குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

எனினும், மருமகள் அதற்கு மறுத்ததால் கணவருடைய வீட்டினரால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து பொலிஸார், குறித்த பெண்ணின் கணவன் உட்பட மாமியாரின் குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd

Post a Comment

0 Comments