இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
காங்கோ - ருவாண்டா ஆகிய நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தை கொண்டாடும் நிகழ்வில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கி விட்டதாக தான் நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கி விட்டதென்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்ட சிலரிடம் நான் தற்போதுதான் பேசினேன். அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படுமென்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.
இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் தங்கள் வசமுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது. ஆனால், ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால் மாத்திரமே போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆயுதங்களை கைவிட முடியாது என்று ஹமாஸ் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments