Ticker

6/recent/ticker-posts

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரமானது நேற்றைய (27) நாளுடன் ஒப்பிடுகின்ற போது இன்று சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 

 இதன்படி, நேற்று 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுண், இன்றைய தினம் 264,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 

நேற்றைய தினம், 246,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று 244,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 

 இந்நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று, தங்கத்தின் விலை சராசாரியாக 2,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. 

 இதன்படி, இன்றைய தினத்தில் 24 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 33,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,525 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Post a Comment

0 Comments