Ticker

6/recent/ticker-posts

ஜூலை 01 முதல்இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை.

ஜூலை முதலாம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

சீட் பெல்ட்களை அணியாத சாரதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்தார். மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டுமென்ற சட்டம் 2011 ஒக்டோபர் 01 முதல் அமுலில் உள்ளது. 

இச்சட்டம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தாலும், பல சாரதிகள் சீட் பெல்ட் அணியாததால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 

இவ்விடயத்தினை கருத்திற் கொண்டு, ஜூலை 01 முதல் இச்சட்டத்தை கட்டாயமாக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

Post a Comment

0 Comments