Ticker

6/recent/ticker-posts

பல பகுதிகளில் நீர் வெட்டு அறிவிப்பு.

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (07) பன்னிரண்டு மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 



இன்று காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 


இலங்கை மின்சார சபையின் சப்புகஸ்கந்த துணை மின்நிலையத்திலிருந்து விநியோக குழாய்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 


இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க/சீதுவ நகர சபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவங்கொட பிரதேச சபை பகுதி மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதியின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments