சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகளை இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறைப்பாடு ஜனாதிபதி செயலகம், பல்வேறு அமைச்சுகள் மற்றும் இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணையத்திற்கு நேரடியாக கிடைத்துள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
மூத்த அதிகாரிகள்
அவற்றில் சிலவற்றிற்கு சட்டமா அதிபரின் உதவியும் பெறப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விசாரணைகளுக்கு இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments