நல்ல வசதியுடன் வளர்த்தெடுத்த தனது செல்ல மகளை வசதியான இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றுதான் எந்த பெற்றோரும் நினைப்பார்கள். அரசியல் பின்புலம் மிக்க பாரம்பரிய குடும்பம்! மாப்பிள்ளைக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லை. 20 நிமிடப் பயணத்தில் சென்று பார்த்து விடக்கூடிய தூரத்தில் வீடு. இதை விட என்ன வேண்டும் என்றுதான் அவர்கள் நினைத்திருப்பார்கள்.
ஆகவே, தான் சுமார் 05 கோடி செலவில் ஊரே பார்த்து வியக்கும்படி மகளின் திருமணத்தை நடத்தியுள்ளார் தந்தை. வால்வோ கார் வேண்டுமா? தருகிறேன்¡ மாப்பிள்ளைக்கு பிசினஸ் வைத்து தர வேண்டுமா? பண்ணிக்கலாம் என்று அனைத்திற்கும் ஆமோதித்துள்ளார் ரிதன்யாவின் தந்தை.
கொங்குப் பகுதியை பொறுத்தவரை ஆண் குழந்தை என்றால் அதிகாரம், வாரிசு, உரிமை.
பெண் குழந்தை என்றால் பாசம், கௌரவம். ஆண் வாடையே படாமல் நல்லபடியாக மகளிர் பள்ளியில் படிக்க வைத்து, மகளிர் கல்லூரிக்கு அனுப்பி ஒரு நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.தோல்வி, காதல், சண்டை, சம உரிமை, ஏமாற்றம், புத்தகம், காத்திருத்தல், விட்டுக்கொடுத்தல் என்று எந்த அடிப்படை அனுபவமும் இருக்காது.
கவினுக்கு மாத வாடகை மட்டும் 20 இலட்சம் வருகின்றது. திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல் வருகின்றது, ரிதன்யாவன் அப்பா வீட்டிற்கு வந்து கவினின் அம்மாவை அழைத்துப் பேசியிருக்கிறார்.
"எம்புள்ளையா இப்படி என பொய்யாய் அதிர்ந்து ரிதன்யாவை அழைத்து சென்றிருக்கிருக்கிறார்" அப்புறம் "உன் பாதுகாப்புக்கு தான்" என சொல்லி வீட்டின் கேட்டை பூட்டி ரிதன்யாவை உள்ளே அடைத்திருக்கிறார்கள்.
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் டார்ச்சர் தொடர்ந்திருக்கிறது. "அனுசரித்துப் போ" என்று பெற்றோர் தரப்பும் அழுத்தம் தர, தோல்வி அடைந்த தன் திருமணத்தால் தன் அப்பாவிற்கு எந்தவிதமான தலைகுனிவும் ஏற்பட்டு விடக்கூடாது என்று “இவர்களிடம் போராட என்னிடம் வலிமை இல்லை அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்” மிக அழகான தமிழில் சொல்லிவிட்டு உலகை விட்டு பறந்து போனது ரிதன்யா எனும் செல்லக் கிளி. பெயரையே பார்த்துப் பார்த்து வைத்தவர்களுக்கு மகளின் மறைவை எப்படி இருக்கும்?
ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.
-மணிமேகலை எம். -
0 Comments