மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கு திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.
இச்சோதனையில், மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஒரு பயணி அணில் குரங்கை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணில் குரங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த அணில் குரங்கு அரிய வகை விலங்காகும்.
அதனை கொண்டு வந்த பயணிடம் விசாரணை நடந்து வருகின்றது. கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.
0 Comments