ஏமனில் இருந்து செயற்படும் ஹவுதி குழுவினர் நடத்திய ஏவுகணை தாக்குதல்களை முறியடித்த இஸ்ரேல், இது தொடர்ந்தால் கடும் பதிலடியை சந்திக்க நேரிடும் என்று ஹவுதி குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல்கள் சமீபத்தில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ஏமனிலிருந்து அதிகளவான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இஸ்ரேலுக்கெதிராக ஹவுதி குழுவினர் ஏவினர்.
இவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால், ஹவுதி குழுவினர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
0 Comments