Ticker

6/recent/ticker-posts

இனிமேல் இந்த மொபைல் போன்களில் You Tube பயன்படுத்த முடியாது. வெளியானது அதிரடி அறிவிப்பு.

மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீடியோ செயலியான YouTube நிறுவனம் அதிடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில வகை அலைபேசிகளுக்கு YouTube செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக , ஐபோன் iPhone பயனர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

YouTube தனது புதிய அப்டேட்டில், YouTube இப்போது iOS 16 அல்லது அதற்கும் மேல் காணப்படும் அலைபேசிகளிலேயே செயலியை இயக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பின்வரும் ஐபோன்களில் இனி YouTube பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

iPhone 6s

iPhone 6s Plus

iPhone 7

iPhone 7 Plus

முதலாம் தலைமுறை iPhone SE

iPod Touch 7

iPad Air 2

iPad mini 4 

ஆகியவற்றில் iOS 15 ஐ விட மேலே அப்டேட் (Update) செய்ய முடியாத சாதனங்கள் என்பதால்தான் இவற்றில் Youtube பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. YouTube செயலியின் புதிய பதிப்பு 20.22.1, ஜூன் 02 ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments