அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' (Big Beautiful Bill) எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினையாற்றி வருகிறார்.
அரசு செயற்திறன் துறை தலைவர் பதவியை துறந்த எலான் மஸ்க், டொனால்ட் ட்ரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தான் உதவியிருக்கா விட்டால் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இந்நிலையில், "அமெரிக்காவின் 80% நடுத்தர மக்களின் பிரிதிநிதியாக புதியதொரு கட்சியை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா?" என X தளத்தில் எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். இதன்மூலமாக, எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளாரா? என்ற கேள்வி வலுவடைந்துள்ளது.
இதற்கிடையே, எப்ஸ்ட்டீன் கோப்புகள் எனப்படும் தொழிலதிபர்கள், பெரும்புள்ளிகள் தொடர்புடைய சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக வலையமைப்பு தொடர்பான வழக்கில் டொனால்ட் ட்ரம்ப்பும் சம்மந்தப்பட்டுள்ளார் என்று எலான் மஸ்க் பகீர் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் வழக்குகள் உள்ள நிலையில் இக்குற்றச்சாட்டு அதிக கவனம் பெற்று வருகின்றது.
0 Comments