ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் இந்தியா, சீனா போப்ற நாடுகள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், 500% வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய மசோதா முன்மொழியப்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சி எம்.பி லிண்ட்சே கிரஹாம் என்பவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியா, சீனாவுடன் மிகச் சிறந்த வர்த்தகம் நடைபெறப் போகின்றது என அமெரிக்கா கூறிவந்தது. இப்போது அந்த 02 நாடுகள் மீதும் 500 வீதம் வரை வரி விதிக்க புதிய மசோதா ஒன்றினை முன்மொழிந்துள்ளது.
ரஷ்யாவை பொருளாதார ரீதியில் தாக்கும் விதமாக அமெரிக்கா இம்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த மசோதா 2025 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மசோதா நிறைவேற்றப்பட்டால், தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் மசகு எண்ணெயினை அதிகளவில் வாங்கக்கூடிய இந்தியா மற்றும் சீனா ஆகிய 02 நாடுகளும் அதிகளவில் பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து கிரஹாம் கூறுகையில், “ரஷ்யாவிடமிருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு, உக்ரைனுக்கு ஆதரவளிக்கவில்லையென்றால், இந்த வரி விதிப்பை எதிர்கொள்ளக் கூடும். இந்தியாவும், சீனாவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடமிருந்து 70% அளவுக்கு மசகு எண்ணெய்யை வாங்குகின்றன” என்றார்.
ரஷ்யாவிலிருந்து அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா காணப்படுகின்றது. மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இந்தியா, சமீபத்திய ஆண்டுகளாக ரஷ்யாவிடமிருந்து கிட்டத்தட்ட 49 பில்லியன் யூரோ வரை மசகு எண்ணெய்யினை உற்பத்தி செய்துள்ளது.
குடியரசுக் கட்சியின் எம்.பி கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் எம்.பி ரிச்சர்ட் புளூமெண்ட் ஆகியோரால் முன்மொழியப்பட்டு வழங்கப்பட்ட குறித்த மசோதாவுக்கு 84 பேர் ஆதரவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments