Ticker

10/recent/ticker-posts

எலோன் மஸ்க் தொடர்பாக ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு.

பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கை(elon musk) அமெரிக்காவிலிருந்து விரட்டவும் தயங்க மாட்டேன் என்று கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump), தற்போது அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலோன் மஸ்க் கண்டிப்பாக தேவையென்று தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


"எலோன் மஸ்க்கிற்கு கொடுக்கப்படும் பெரும் மானியங்களை நிறுத்தி அவரை அழித்து விடுவேன் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அது உண்மையல்ல. அமெரிக்கா வளர்ச்சியடைய எலோன் மஸ்க் கண்டிப்பாக இருக்க வேண்டும்

எனக்கு எலோன் மஸ்க் மற்றும் அவருடைய அனைத்து வியாபாரங்களும் அமெரிக்காவிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. முன்பு இருந்ததை விடவும் அது இன்னும் நன்றாக செயல் புரிய வேண்டும். அவ்வாறு செயற்படும் போதுதான் அமெரிக்கா வளர்ச்சியடையும். அவருக்கும் நல்லது, எம் அனைவருக்கும் நல்லது," என்று ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவுக்கு எலோன் மஸ்க், "நன்றி" என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார்.

எலோன் மஸ்க்கை இதுவரையில் கடுமையாக விமர்சித்தும், மறைமுகமாக அச்சுறுத்தியும் வந்த ட்ரம்ப், திடீரென 'அந்தர் பல்டி' அடித்து அவர் அமெரிக்காவுக்கு அவசியம் தேவையென்று குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் வாதத்தை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments