டென்மார்க் பாராளுமன்றம், பெண்களை குலுக்கல் முறையில் கட்டாய இராணுவ சேவைக்கு உட்படுத்துவதற்கான மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், 18 வயது பூர்த்தியான பெண்கள் கட்டாய இராணுவ சேவையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இதுவரை, டென்மார்க்கில் இராணுவ சேவை விருப்பத்தின் அடிப்படையில் மாத்திரமே இருந்தது.
ஆனால், புதிய சட்டத்தின் கீழ், 18 வயது பூர்த்தியான ஆண்களும் பெண்களும் தங்கள் பெயர்களை இராணுவ சேவைக்கு கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், விருப்பம் தெரிவித்தவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கப்படுவர், மற்றவர்கள் குலுக்கல் முறையில் இராணுவ சேவைக்கு தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவுக்கப்பட்டுள்ளது.
0 Comments