முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பதில் பொலிஸ்மா அதிபரால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சுற்றறிக்கையை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வெளியிடுவதற்கு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சட்டமா அதிபர் நேற்று (03) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கெதிராக எரிசக்தி நிபுணர் விதுர ரலபனாவ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
0 Comments