இந்தியாவின் பீகார் அவுரங்காபாத் பகுதியில் 55 வயது மாமனாரை திருமணம் செய்ய 20 வயது இளம்பெண்ணொகுவர் தனது கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 வயதுடைய கணவரே இக்கொலை சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 45 நாட்களே ஆகிறது.
மாமனாகும், குறித்த இளம் பெண்ணும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கணவனை கொலை செய்துள்ளனர்.
தகவல் அறிந்த பொலிஸார் குறித்த பெண்ணையும் மற்றும் கொலை செய்த 02 பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள மாமனாரை தேடி வருகின்றனர்.
மேலும் குறித்த விசாரணையில், திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரும் தகாத உறவில் இருந்ததோடு திருமணம் செய்து கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், பெண்ணின் பெற்றோர் அதனை விரும்பாமல் கட்டாயப்படுத்தி 02 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.
இதையடுத்து, தனது கணவனை கொன்று விட்டு மீண்டும் தனது மாமாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு பெண் முடிவு செய்துள்ளார்.
இதன்படி, தனது தங்கை வீட்டிற்குச் சென்று விட்டு ரயிலில் பயணித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த கணவர், நவிநகர் ரயில் நிலையத்தினை வந்தடைந்துள்ளார். அதன் பின்னர், மனைவியை தொடர்பு கொண்டு தன்னை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு மோட்டார் சைக்கிளில் யாரையேனும் அனுப்பும்படி கேட்டுள்ளார்.
பின்னர் வீட்டை நோக்கிப் புறப்பட்ட கணவரை, திடீரென 02 பேர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments