Ticker

6/recent/ticker-posts

மாதுளம் பழத்தின் தோலினை தூக்கி வீசுகிறீர்களா? இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள்.

மாதுளை அதிக சத்துக்கள் கொண்டது. மாதுளம் பழத்தினை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், இதன் தோலை தூக்கிப் போட்டு விடுகின்றனர். ஆனால் அதன் தோலில்கூட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மாதுளை தோலில் புரதம், பீனாலிக் கலவைகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆதலால், மாதுளை தோலை நன்கு வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 



பயன்கள் என்ன?

மாதுளை தோல் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சளி, இருமல், தொண்டை வலி என்பவற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.

தொண்டை வலி இருக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் இந்த மாதுளம் பொடியை கலந்து வாய் கொப்பளிக்கலாம். சிலர் தேநீரில் கலந்து பருகுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மேலும், உடலில் சேரும் தேவையற்ற கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும் தன்மை மாதுளையின் தோலுக்கு உள்ளது.

தினமும் சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வருவதன் மூலமாக, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயற்பாடு சீராகி, உடலிலுள்ள நச்சுக்கள் திறம்பட வெளியேற்றப்படும்.

எனவே, அடுத்த முறை மாதுளையை உரிக்கும் போது, அதன் தோலை வீணாக தூக்கி எறியாமல், இந்த அனைத்து நன்மைகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பலனை பெறுங்கள். 

Post a Comment

0 Comments