Ticker

6/recent/ticker-posts

கிண்ணியாவில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது.

 கிண்ணியாவில் 12,420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காக தனது உடமையில் வைத்திருந்த கிண்ணியா - மகரூப் பிரதேசத்தை சேர்ந்த, 57 வயதானபெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பெண் நேற்றிரவு (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற, இரகசியத தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் மேலதிக நடவடிக்கைகளுக்காக, இன்று (10) ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments