Ticker

10/recent/ticker-posts

பாடசாலை நேரம் 02 மணி வரை நீடிப்பு: அதிபர்கள் சங்கம் கடும் எச்சரிக்கை

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை நேரத்தை 2.00 PM மணி வரை நீடித்தல் மற்றும் ஒரு பாடவேளையை (Period) 50 நிமிடங்களாக அதிகரித்தல் ஆகிய தீர்மானங்களை உடனடியாக வாபஸ் பெறுமாறு தரம் பெற்ற அதிபர்கள் சங்கம் (Graded - Principals Association) கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் முன் வைத்த முக்கிய கருத்துக்கள்:

  • நெருக்கடி நிலை: தரம் 06 இற்கான புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக தரம் 7, 8, 9, 10, 11 மற்றும் உயர்தர வகுப்புகளில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
  • கோரிக்கை: அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் போதுமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்களுடைய கருத்துக்களுக்கு செவி சாய்த்து நெகிழ்வுத்தன்மையுடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
  • எச்சரிக்கை: ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கருத்துக்களைப் புறக்கணித்து, எதிர்வரும் 2026 ஜனவரி 05 ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 PM மணி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments