2025 ஆம் ஆண்டுக்கான GCE (A/L) செயன்முறைத் தேர்வுகளுக்கான (Practical Examination) கால அட்டவணையை இலங்கை பரீட்சைகள் தினைக்களம் (Department of Examinations – Sri Lanka) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதன்படி, செயன்முறைத் தேர்வுகள் 2026 ஜனவரி 18 தொடக்கம் 2026 மார்ச் 16 வரை பல கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட அட்டவணைகளின் பிரகாரம்,
- விவசாய அறிவியல் (சிங்களம் / தமிழ்) – 2026.01.18
- உயிரியல் தொழில்நுட்பம் – 2026.01.31
- பொறியியல் தொழில்நுட்பம் – 2026.02.28
- நாடகம் (சிங்களம் / தமிழ்) – 2026.03.01
- நடனம், இசை மற்றும் காட்சி கலைப் பாடங்கள் – 2026.03.02 முதல் 2026.03.03 வரை
- நாடகமும் அரங்கியலும் (சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்) – 2026.03.03
இப்பாடங்களுக்கான செயன்முறைத் தேர்வுகள்,
2026.01.24 – 2026.02.02
2026.02.06 – 2026.02.10
2026.03.06 – 2026.03.15,
2026.03.09 – 2026.03.16
ஆகிய காலப் பகுதிகளில் நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் தங்களது பாடங்களுக்கு உரிய தேர்வு தினங்கள், நேரங்கள் மற்றும் மையங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை கல்வித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


0 Comments