உலகச் சந்தையில் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து வருகின்றது.
அவ்வகையில் நேற்றைய (27) நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தினுடைய விலை 4,553 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில், இலங்கையில் நேற்று சனிக்கிழமை (27) மாத்திரம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
இதன்படி இன்று (28) மாத்திரம் 12,000 ரூபாவினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று தங்கத்தின் விற்பனை நிலவரப்படி, நேற்று 329,300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 340,400 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments