Ticker

10/recent/ticker-posts

கம்பீர் நீக்கப்படுவாரா? BCCI விளக்கம்.

 இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் செயற்பட்டு வருகின்றார். 

அவருடைய பயிற்சியின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றது. குறிப்பாக, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு நாடுகளின் அணிளுக்கெதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா படுதோல்வியடைந்தது. 

இதனால், டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்குவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின. 

டெஸ்ட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக VVS லக்ஸ்மன் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. 

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து கம்பீரை நீக்கும் திட்டம் எதுவுமில்லையென்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினுடைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இவர் கருத்து தெரிவிக்கையில், தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் குறித்து செய்திகள் தொடர்ந்தும் பரவி வருகின்றன. ஆனால், டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து கம்பீரை நீக்கும் திட்டம் இல்லை. இது குறித்து BCCI தலைவர் தேவஜித்தும் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments