Ticker

10/recent/ticker-posts

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

 ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று செவ்வாய்யக்கிழமை (30) அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி தமது வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். 

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நாலக கீக்கியனகே, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவை முறையாக நிறைவேற்றுவதற்கு முன்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதனை அங்கீகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சட்டம் இயற்றப்பட்ட பின்னர் செயற்படுத்தப்பட்டாலும் அதனை முன்கூட்டியே செயற்படுத்துவது பல்கலைக்கழக சுயாட்சியை பாதிக்கும் என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் இப்பணி நிறுத்தத்தை ஆதரிப்பதாக பேராசிரியர் கீக்கியனகே மேலும் தெரிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments