Ticker

10/recent/ticker-posts

02 வருட காதல் தோல்வி: திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து.

தற்போது தம்பதிகளிடையே விவாகரத்து அதிகரித்து வருகின்றது. ஆனால், புதிதாக திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி, திருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்துள்ளனர்.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேயில் மருத்துவராக பணியாற்றி வருகின்ற பெண்ணும், கப்பலில் பொறியாளராக (Engineer) பணியாற்றி வரும் ஆண் ஒருவரும் 02 வருடங்களுக்கு அதிகமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், திருமணமான 24 மணி நேரத்தில் இருவரும் பிரிந்து வாழப்போவதாகவும், விவாகரத்து பெறப் போவதாகவும் அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி குறித்த விவாகரத்து வழக்கை கையாண்ட சட்டத்தரணி, "கணவன் - மனைவி இடையேயான சித்தாந்த வேறுபாடுகள் மிகவும் ஆழமாக இருந்ததால், அவர்கள் உடனடியாகப் பிரிந்து செல்வதற்கு முடிவெடுத்தனர். இவ்வழக்கில் வன்முறை அல்லது குற்றவியல் தவறு செய்ததாக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை.

திருமணத்திற்குப் பின்னர், கணவர் அவருடைய மனைவியிடம், தான் ஒரு கப்பலில் வேலை செய்வதன் காரணமாக எப்போது? ​​எங்கு பணியமர்த்தப்படுவேன்? எவ்வளவு காலம் வெளியூரில் இருப்பேன்? என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

திருமணத்திற்கு முன்னர் இருவரும் 02 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவ்வளவு முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படாமல் இருந்தமை ஆச்சரியமாக உள்ளது.

இந்தியாவில் பொதுவாக விவாகரத்து வழக்குகள் முடிவிற்கு வர நீண்ட காலம் எடுக்கின்ற நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே தம்பதியினர் தனித்தனியாக வாழத் தொடங்கி விட்டதால், இவ்வழக்கு விரைவாக தீர்க்கப்பட்டது." என்றும் தெரிவித்துள்ளார்.  

பிரித்தானியாவில், 2014 இல் மணப்பெண் தோழிகளுக்கு மணமகன் வழங்கிய சிற்றுண்டியால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது.

இதே போன்று, குவைத்தில் திருமண நிகழ்ச்சிகள் முடிந்து மணமக்கள் வீட்டிற்கு கிளம்புவதற்கு தயாரான போது, மணமகள் கால் தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது மணமகன், "பார்த்து நடக்கத் தெரியாதா முட்டாள்?" என்று திட்டியதால், திருமணமான 03 நிமிடத்தில் விவாகரத்து பெறப் போவதாக மணப்பெண் தெரிவித்தமை குறிப்பிடத்தாக்கது.

இதே போன்றதோர் அமைப்பிலேயே இவ்விவாகரத்தும் பார்க்கப்படுகின்றது.


Post a Comment

0 Comments