Ticker

10/recent/ticker-posts

குளோப் சாக்கர் விருது பெற்றார் ரொனால்டோ

துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற புகழ்பெற்ற ‘குளோப் சாக்கர் விருதுகள் – 2025’ விழாவில், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ‘சிறந்த மத்திய கிழக்கு வீரர்’ (Best Middle East Player) எனும் விருது வழங்கப்பட்டது.

சவூதி லீக்கில் அவர் வெளிப்படுத்திய அசாத்தியமான விளையாட்டுத் திறன், தொடர்ந்து அடித்த கோல்கள் மற்றும் நிலையான ஆட்டத்தின் ஆளுமை காரணமாக, அந்த லீக்கின் முகமாக ரொனால்டோ திகழ்கின்றார்.

இப்பெருமைக்குரிய விருதை துபாய் ஆட்சியாளர் குடும்பத்தைச் சேர்ந்த மேதகு ஷேக் முகம்மது பின் ரஷித் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் கையளித்தார்.

விருது பெற்ற பின்னர் பேசிய ரொனால்டோ, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, “வயது ஒரு எண் மட்டுமே. எனது ஆர்வம், உழைப்பு, இலக்கு இன்னும் அதே தீவிரத்தில் தொடர்கிறது” என்று தெரிவித்தார். அவருடைய உரை இரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments