முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலமாக பாடசாலைகளில் பாலியல் கல்வியை ஊக்குவிப்பதற்கு முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை கல்வியமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் நலக கலுவெவ இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் பின்வரும் முக்கிய விடயங்களைக் தெரிவித்துள்ளார்:
குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு: கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பாலியல் கல்வியை திணிப்பதற்கு முயற்சிப்பதாகக் கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை.
தவறான புரிதல்: 02 வெவ்வேறான விடயங்களை ஒன்றாக இணைத்துச் சிந்திப்பதன் காரணமாகவே இவ்வாறான குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவதோ அல்லது அதனை விரிவுபடுத்துவதோ தற்போதைய சீர்திருத்தங்களின் நோக்கமல்ல.
பாடத்திட்ட மேம்பாடு: இச்சீர்திருத்த செயன்முறையில் பாலியல் கல்விக்கு முன்னுரிமையோ அல்லது அது குறித்த பரிசீலனையோ என்று எதுவும் வழங்கப்படவில்லை.
கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இச்சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் நிலவுகின்ற தேவையற்ற அச்சத்தை தவிர்க்குமாறும் அமைச்சின் செயலாளர் மேலும் கேட்டுக் கொண்டார்.

0 Comments