Ticker

10/recent/ticker-posts

சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் இந்திய நிறுவனம் கடிதம்.

சர்ச்சைக்குரிய மருந்துகளை சர்வதேச தரத்திலான ஆய்வுகூடமொன்றில் பரிசோதிக்குமாறு, சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனம் இலங்கையின் சுகாதார அதிகாரிகளுக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியவற்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (19) கடிதமொன்றை அனுப்பி 'மான் பார்மசியூட்டிகல்ஸ்' எனும் இந்திய நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. 

அதற்கான செலவுகளை ஏற்க தமது நிறுவனம் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். 

'மான் பார்மசியூட்டிகல்ஸ்' நிறுவனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சர்ச்சைக்குரிய 'ஒன்டன்செட்ரோன்' உள்ளிட்ட 10 வகையான தடுப்பூசி மருந்துகளின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments