உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் 25 பேர் கொண்ட உத்தேச பட்டியல் நேற்று வெள்ளிக்கிழமை (19) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தலைவர் பொறுப்பில் இருந்து சாரித் அசலங்க அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இவருடைய மோசமான துடுப்பாட்டம் காரணமாக தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் இலங்கை தேர்வு குழு தலைவர் பிரமோதயா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால், சமீபத்தில் பாகிஸ்தானில் விளையாடியபோது குண்டு வெடித்ததால் பாதுகாப்பு அச்சத்தால் அசலங்க பாதியிலேயே நாடு திரும்பினார். அங்கு தொடர்ந்து விளையாடும்படி இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியும் அவர் அதை ஏற்காததே பதவி பறிப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு பதிலாக சகல துறை ஆட்டக்காரரான தசுன் ஷனகா அணியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுவுள்ளார். எனினும், அசலங்க ஒரு வீரராக தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments