Ticker

10/recent/ticker-posts

இந்திய பிரதமருக்கு ஓமானின் தனித்துவமான உயரிய விருது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (18) ஓமானுக்கு பயணித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஓமானின் மிக உயர்ந்த குடிமகன் விருதான 'த பெர்ஸ்ட் கிளாஸ் ஒஃப் த ஓர்டர் ஒஃப் ஓமான்' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 

இந்தியா - ஓமான் உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி, சுல்தான் ஹைதம் பின் தாரிக்கினால் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் திறமைக்கும், உலகளாவிய தலைவராக அவர் ஏற்றுக் கொண்டதற்கும் இவ்விருது ஒரு மகத்தான அங்கீகாரமாகும் என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

இவ்விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் மோடி, பல்வேறு முக்கிய அரச பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

இவ்விருது, ஏற்கனவே ராணி இரண்டாம் எலிசபெத், நெதர்லாந்து ராணி மேக்சிமா, ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, நெல்சன் மண்டேலா மற்றும் ஜோர்தான் மன்னர் அப்துல்லா ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இப்பட்டியலில் இந்திய பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments