Ticker

10/recent/ticker-posts

மகாவெலி கங்கை வட்டாரத்தில் வெள்ள அபாயம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில், மகாவெலி கங்கை ஆற்றுப் படுக்கை மற்றும் அதற்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில், நேற்று (17) இரவு முதல் தொடங்கி தொடர்ந்து பெய்து வரும் மழையால் அடுத்த 48 மணிநேரங்களில் வெள்ள நிலைமை ஏற்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட தாழ்வுகளாக கிண்ணியா, மூதூர், கந்தளை, சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ, திம்புலாகல போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் அடங்குமென்று குறிப்பிடப்பட்டு அவற்றில் மானிலத்துக்கு மேல் நீர் வந்தால் பெரும் அபாயம் உருவாகலாம் என்று எச்சரிக்கப்பட்டது.

மேலும், மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்லும் பாதை, மற்றும் சோமாவதிய ரஜ மகா விகாரையை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்கள், அடுத்த சில நாட்கள் மேலதிக அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் செல்லாமல் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், மகாவெலி நதிக்கரையோரங்களில் வாழும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், வெள்ள அபாயத்திலிருந்து தங்களையும், தங்களுடைய சொத்துக்களையும் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுப்பாட்டை பின்பற்றி, பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments