இன்று (31) தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூபாய் 354,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூபாய் 327,000 ஆக பதிவாகியுள்ளது.
உலக சந்தை நிலவரம், டொலர் மதிப்பு மாற்றம் மற்றும் பொருளாதார காரணிகளின் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் இம்மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டை முன்னிட்டு தங்க நகைகளுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், விலை மேலும் மாற்றமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments